உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?
. தமிழ்நாடு கோவில்களுக்கு பெயர்போன ஒரு மாநிலம் அதற்கு அடுத்தபடியாக வாய்க்கு ருசியான உணவுவகைகளின் பிறப்பிடம் தமிழகம் என்றால் மிகையாகாது, அந்த வகையில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சிறப்பு உணவு பெயர் பெற்றது அந்த வகையில் எனக்கு தெரிந்த உணவு வகைகளை பகிர்ந்துள்ளேன், தாங்களும் தங்கள் பகுதி சிறப்பு உணவுகள் இருக்குமாயின் பகிர்ந்து கொள்ளவும். "வடகறி " முதலில் தமிழகத்தின் தலை நகரான சென்னையை எடுத்துக் கொண்டால் வடகறி என்கிற கடலைபருப்பு செய்யப்படும் இந்த உணவுப்பண்டம் இட்லி தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைகளுக்கு சிறந்த துணை உணவாகும். "கறி தோசை" சென்னையை தொடர்ந்து கோவில்கள் நிறைந்த நகரான மதுரையை எடுத்துக் கொண்டோமானால் பல சிறப்புகளை பெற்றுள்ளது, முக்கியமாக தூன்கானகரம் என்று பெயர் பெற்ற மதுரையில் 24 மணி நேரமும் பசியாற உணவு கிடைக்கும். சிறப்பான உணவு வகைகளும் பல உண்டு, குறிப்பாக கோனார் கடை கரி தோசை சிறப்பு வாய்ந்தது. "செட்டிநாட்டு உணவு வகைகள் " காரைக்குடி செட்டிநாடு அனைத்து உணவுகளுக்குமே சிறப்பு வாய்ந்ததாகும் குறிப்பாக அசைவ உணவுகள் மிகவும் உலகப்...
Comments