உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

.

தமிழ்நாடு கோவில்களுக்கு பெயர்போன ஒரு மாநிலம் அதற்கு அடுத்தபடியாக வாய்க்கு ருசியான உணவுவகைகளின் பிறப்பிடம் தமிழகம் என்றால் மிகையாகாது, அந்த வகையில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சிறப்பு உணவு பெயர் பெற்றது அந்த வகையில் எனக்கு தெரிந்த உணவு வகைகளை பகிர்ந்துள்ளேன், தாங்களும் தங்கள் பகுதி சிறப்பு உணவுகள் இருக்குமாயின் பகிர்ந்து கொள்ளவும்.

"வடகறி "
முதலில் தமிழகத்தின் தலை நகரான சென்னையை எடுத்துக் கொண்டால் வடகறி என்கிற கடலைபருப்பு  செய்யப்படும் இந்த உணவுப்பண்டம் இட்லி தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைகளுக்கு சிறந்த துணை உணவாகும்.



"கறி  தோசை"
சென்னையை தொடர்ந்து கோவில்கள் நிறைந்த நகரான மதுரையை எடுத்துக் கொண்டோமானால் பல சிறப்புகளை பெற்றுள்ளது, முக்கியமாக தூன்கானகரம் என்று பெயர் பெற்ற மதுரையில் 24 மணி நேரமும் பசியாற உணவு கிடைக்கும். சிறப்பான உணவு வகைகளும் பல உண்டு, குறிப்பாக கோனார் கடை கரி தோசை சிறப்பு வாய்ந்தது. 


"செட்டிநாட்டு உணவு வகைகள் "

காரைக்குடி செட்டிநாடு அனைத்து உணவுகளுக்குமே சிறப்பு வாய்ந்ததாகும் குறிப்பாக அசைவ உணவுகள் மிகவும் உலகப்புகழ் பெற்றவை 

கோவை, சேலம் கொங்கு நாட்டு சிறப்பு உணவு 

பொதுவாக கொங்கு நாட்டு உணவுகளில் மஞ்சளும் தேங்காயும் மிகுந்து காணப்படும், சுவை மிகுந்த உணவு வகைகள் பல இந்த மாவட்டத்தின் சிறப்பு 

குமரி மாவட்ட நாஞ்சில் நாட்டு உணவு 

குமரி மாவட்ட பகுதிகள் மீன் உணவுக்கு சிறப்பு வாய்ந்தவை தேங்காய் மிகவும் விருப்பமாக அனைத்து உணவுகளிலும் சேர்ந்த்துக் கொள்ளப்படும்.

திண்டுக்கல் மற்றும் ஆம்பூர் பிரியாணி.

பிரியாணிக்கு புகழ் பெற்றது ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகும், அதிலும் திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி என்றால் உலகப்புகழ் பெற்றவை .

ஆர்க்காடு ஸ்வீட்  "மக்கன் பேடா"

ஆற்காடு பகுதியில் மக்கன் பேடா என்ற இனிப்பு வகை மிகவும் பிரசித்தி பெற்றது.

விருதுநகர் பரோட்டா 

எண்ணையில் பொரித்த விருதுநகர் பரோட்டா சிறப்பு வாய்ந்தது 


தூத்துக்குடி மக்ரோன் 

மக்ரோன் என்னும் இனிப்பு வகை தூத்துக்குடியில் பிரசித்தி பெற்றவை.


திருநெல்வேலி ஹல்வா 

திருநெல்வேலியில் ஹல்வா உலகப்பிரசித்தி பெற்றது.


கோவில்பட்டி கடலை மிட்டாய் 

நாவூற செய்யும் கடலை மிட்டாய் கோவில்பட்டியில் புகழ்பெற்றது 


ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா 

ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா உலகப்பிரசித்தி பெற்றது, நாவை நடனமாட செய்வது.


நீலகிரி வர்க்கி 
குளிர்பிரதேசமான நீலகிரியில் வர்க்கியும் சாக்லேட்டும் பிரசித்தி பெற்றவை.


இதே போன்று தங்கள் ஊரில் அல்லது தங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற உணவுகளை இங்கே பதிவிடவும்.. நன்றி... ;:)























Comments

Popular posts from this blog

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்