மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்
திரைப்படங்களை பொருத்தவரை மேக்கப் என்பது இன்றியமையாத ஒன்றாகும் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மேக்கப் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனாலும் ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களில் செய்யும் அளவிற்கு இன்னும் மேக்கப் தொழில்நுட்பங்கள் முழுமையாக இந்தியாவிலோ அல்லது மற்ற நாட்டிலோ வளர்ச்சியடையவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த தமிழ்ப்பெண் தனலட்சுமி அவர்கள் இந்த மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது, ஒரு தமிழர் வியத்தகு சாதனைகளை மேக்கப் துறையில் செய்து வருவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றே.
ஹாலிவுட் அளவில் பல நவீன தொழில்நுட்பங்களை உபயோகித்து செய்யப்படும் மேக்கப்பிற்கு இணையாக மலேசிய திரைப்படங்களுக்கு மேக்கப் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதாரண ஒப்பனைக் கலைஞராக தனது கலைப்பணியை தொடர ஆரம்பித்த தனலட்சுமி அவர்களுக்கு மேக்கப் கலை மீது உள்ள காதலால் மென்மேலும் தனது கலையை அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹாலிவுட் அளவில் செய்யப்படும் மேக்கப் போன்றவைகளை நம்மாலும் ஏன் செய்ய முடியாது என்ற சவாலை மனதளவில் விடுத்துக்கொண்டு உழைக்க ஆரம்பித்து பல மலேசிய திரை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆதரவுடன் இன்றுவரை பல தமிழ் மற்றும் மலாய் திரைப்படங்களுக்கு அனைவரும் வியக்கதக்கவகையில் மேக்கப் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மேக்கப் துறையில் பற்பல சாதனைகள் செய்து வரும் இவருக்கு இந்திய தமிழ்ப்பட துறையில் தமிழ்நாட்டு திரைப்படங்களுக்கு மேக்கப் பணியாற்ற மிகவும் ஆர்வமாய் உள்ளார், இவரது ஆவலை பூர்த்தி செய்யும் வகையிலும் தமிழ்திரைஉலகம் ஒரு அற்புதமான கலைஞர்ஐ பயன்படுத்தி தமிழ் ரசிகர்களுக்கு வித்யாசமான மேக்கப் கலையை அறிமுகப்படுத்துமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும், தனலட்சுமி க்கு அவரது லட்சியங்கள் நிறைவேற எங்களது அன்பான வாழ்த்துக்கள்.
Comments