பூண்டின் மகத்துவம் ( Uses of GARLIC )


* தினமும் இரண்டு பூண்டுப் பல் சாப்பிட்டுவந்தால், உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடக்கும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து, உடல் எடை குறையும். ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரகக் கற்கள் உருவாவது தடுக்கப்படும்.
* மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.
* புற்றுநோய்க்கான அபாயம் குறைவதுடன், புற்றுநோய்க் கட்டிகளை வளரவிடாமல் தடுக்கும்.
* உடலில் தேவையற்ற வேதிப்பொருட்களான பாதரசம் மற்றும் காரீயம் போன்றவற்றை உடலைவிட்டு அகற்ற, பூண்டு உதவுகிறது.
* புண்கள், காயங்கள் விரைவில் ஆறுவதற்கும், வாயுப் பிரச்னை வராமல் தடுப்பதற்கும் இது மருந்து.
* தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, அரை டம்ளர் பாலில் ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து, அதில் இரண்டு அல்லது மூன்று பூண்டுப் பல் சேர்த்து, நன்றாகக் காய்ச்சவும். அரை டம்ளராகச் சுண்டியதும், வெதுவெதுப்பான சூட்டில் அருந்தவும்.
* இரண்டுப் பூண்டுப் பல்லை சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து, தோலில் ஏற்படும் எரிச்சல், சிறிய காயங்கள் மீது தடவிவர பலன் கிடைக்கும்.
* பூண்டு நல்ல ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படும் தன்மைகொண்டது. தொடர்ந்து பூண்டு சாப்பிட்டுவந்தால், கெட்டக் கொழுப்பு கரைந்து, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறையும்.
* வயிற்றுவலி மற்றும் குடல் பகுதியில் பிரச்னை உள்ளவர்கள், பூண்டுக் கஷாயம் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* இரண்டு முதல் நான்கு பூண்டுப் பல்லைச் சுட்டு, தேனில் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் குணமாகும்.
* நெஞ்சு எரிச்சல், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பித்தம் உள்ளவர்கள், ஏதேனும் அறுவைசிகிச்சை செய்தவர்கள், மாரடைப்பு வந்தவர்கள் மருத்துவர் பரிந்துரையின்றிப் பூண்டினைப் பயன்படுத்த வேண்டாம்.
* பூண்டுப் பல்லை வேகவைக்காமல் சாப்பிடுவது, நல்ல பலனைத் தரும். வாதம், கபம் உள்ளவர்களுக்குப் பூண்டு ஏற்றது.
* ஒரு நாளைக்கு நான்கு பூண்டுப் பற்களுக்கு மேல் சாப்பிடக் கூடாது. அதிகம் சாப்பிட்டால், நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்