புற்றுநோய் தடுக்கும் அவகோடா பழம்...

பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும்.
அவகேடோ பழம் :-
இரத்த அழுத்தத்தை சீராகப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும். பொட்டாசிய சத்து உடலில் குறைந்ததால் தான் இரத்த அழுத்த பிரச்சனை வரும். அத்தகைய பொட்டாசியம் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :-
அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
புற்றுநோயை எதிர்க்கும் :-
அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
நார்ச்சத்து மிக்கது :-
அவகேடோ பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், உடல் எடையைக் குறைக்கவும், உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவும். மேலும் செரிமான பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் சரிசெய்யும்.
ஆர்த்ரிடிஸ் :-
அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது. எனவே இப்பழத்தை டயட்டில் சேர்த்து, எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறுநீரக பாதிப்பு :-
இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.
ஆரோக்கியமான கண்கள் :-
அவகேடோவில் லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் பண்புகள் அடங்கியுள்ளது. இந்த கரோட்டினாய்டுகள் கண் புரை மற்றும் மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைக் குறைக்க உதவும். மேலும் வேறு சில கண் பார்வை பிரச்சனைகளையும் சரிசெய்து, ஆரோக்கியமான பார்வைக்கு உதவும்.

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்