எளிதில் கிடைக்கும் அவரைக்காய் தரும் பலன்கள்..


அவரைக் கொடி சாதாரணமாக எல்லாவிடங்களிலும் பயிராகவோ அல்லது தானாகவோ வளரும் ஓர் தாவரம் ஆகும். தென்னிந்திய வீடுகளில் உணவுக்கெனப் பெரும்பாலும் ஆடி மாத வாக்கில் விதை விதைத்து வைப்பர். சுமார் ஆறு மாத கால அளவில் அதாவது மார்கழி, தை மாத காலங்களில் கொத்துக் கொத்தாக காய்களும் வெள்ளை மற்றும் நீல நிறப் பூக்களும் கொண்டு அழகாகத் தோற்றம் தர வளர்ந்து இருக்கும்.
அவரைக்காய் பத்திய உணவாகக் கருதப்படும். அவரையை கறியாகவோ குழம்பாகவோ சமைத்துச் சாப்பிட மிக்க சுவை தருவதாக விளங்கும். அவரை என்னும் போது பொதுவாகக் கொடி அவரையைத்தான் குறிப்பிடுவது வழக்கம். ஆனாலும் அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் சிலவாக கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக் கொம்பு அவரை, வெள்ளவரை ஆகியவற்றை கூறலாம்.
அவரையில் உடலுக்கு ஊட்டச்சத்தும் மருந்தும் ஆகும் பொருட்கள் மலிந்துள்ளன. அவரையில் “போலேட்” என்னும் விட்டமின் சத்து மிகுதியாக உள்ளது. ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையான “போலேட்” விட்டமின் சத்தில் 44% அளவு உள்ளது. இந்த “போலேட்” தாவர ரசாயன மாற்றங்களுக்கு உறுதுணையாய் நின்று மரபு அணுக்களின் உற்பத்திக்கும், செல்களின் வளர்ச்சிக்கும், அமினோ ஆசிட்கள் உருவாவதற்கும் உதவுகிறது. மேலும் கர்ப்பிணிகளின் வயிற்றில் வளருகின்ற குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தினைத் தருவதாகவும் “போலேட்” உதவுகின்றன.
இதனால் கரு உருவாவதற்கு முன்போ கருவுற்ற பின்போ தாய்மார்கள் அவரைப் பிஞ்சினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் குறைப் பிரசவம், குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள், முதுகுத் தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள் ஆகியன வராமல் குழந்தை ஆரோக்கியமாக உருவாவதற்கும் உதவுகிறது. அவரையில் உள்ள இரும்புச் சத்து ரத்த சிவப்பு அணுக்கள் உருவாக உதவுகின்றது.
ஒரு கப் அவரைக்காயில் சராசரியாக ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச் சத்தில் 33% அளவு இருக்கின்றது. உடல் முழுவதும் பிராண வாயுவைக் (ஆக்ஸிஜன்) கொண்டு செல்லும் பணிக்கு உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உஷ்ணம் பெறுவதற்கும், மூளையினின்று செல்லும் மின் சமிக்ஞைகள் சீராகச் செல்வதற்கும் உறுதுணையாக விளங்குகின்றது.
“பேக்டீரியாஸ்” என்னும் நோய் செய்யும் நுண் கிருமிகளை அழிக்கும் பணிக்கு உதவும் ரத்த வெள்ளை அணுக்களுக்கு புத்துணர்வு தருவதாகவும் இரும்புச் சத்து விளங்கு கிறது. அவரையில் உள்ள துத்தநாகச் சத்து உடல் சீராக இயங்குவதற்குத் தேவையான “என்ஸைம்“ என்னும் மருத்துவ வேதிப் பொருள்கள் சுமார் நூறு விதமானவை “ஸிங்க்” என்னும் துத்தநாகச் சத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
இதனால் துத்தநாகச் சத்து மனித உடல் சீராக வளர்வதற்கும், உடல் ஊனம் ஏற்படாமல் காப்பதற்கும், நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் வராமல் இருப்பதற்கும் இந்த துத்தநாகச் சத்து உதவுகிறது. ஒரு கப் அவரைக்காயில் தினசரி தேவையில் 15% சத்தினை அவரை தரும் என்பது ஆய்வுகளின் முடிவு. அவரைக்காயில் மிகுந்த நார்ச்சத்தும் அடங்கி உள்ளது. சராசரி தேவையில் பெரும்பகுதி நார்ச்சத்தை அவரை தருகிறது. ஒரு கப் அவரைக் காயில் 36 கிராம் நார்ச்சத்து உள்ளது எனத் தெரிய வருகின்றது.
இந்த நார்ச்சத்து சீரண உறுப்புகளைச் சீராக இயங்க வைக்க உதவுகின்றது. இதனால் மலச்சிக்கல் அறவே இல்லாமல் இருப்பதோடு உடலில் தன்னிச்சையாகச் செயல்பட்டு ஒருங்கு சேர்ந்து புண்களை உருவாக்கி நாளடைவில் புற்று நோயாக மாறச் செய்யும் மாசுக்களை (டாக்ஸின்) உடலில் தங்காத வண்ணம் வெளியேற்ற உதவுகிறது.
மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு உரித்தான மலச்சிக்கல் நோய்க்கும் இது மருந்தாகிறது. அவரையில் பொதிந்துள்ள புரதச்சத்தும், நார்ச்சத்தும் ஒருங்கே சேர்ந்து உடல் எடை குறைவதற்கு உதவுகின்றது. இது உடலில் சேர்ந்த கொழுப்புச் சத்தை வெளியேற்றவும் வகை செய்கிறது. இதனால் இதய நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் இதயம் சீராகச் செயல்படுவதற்கும் ஏதுவாகின்றது.

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்