பல் வலிக்கு எளிதான வீட்டு வைத்தியம்...


மனிதனின் உடம்பில் மிகவும் கடினமான பகுதி எதுவென்றால் எலும்புகளும், பற்களும் தான். ஆனால் இப்பகுதிகளில் வலி ஏற்பட்டால் தாங்கிக் கொள்வதும் மிகவும் கடினமானது தான்.
பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும்.
எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரைவைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும்.
காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும்
பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம்
* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்