எங்கள் காதலை புதுப்பித்த அந்த இனிய குதூகலமான மாலைப் பொழுது.
அந்த மாலைப்பொழுது அப்படி ஒரு குதூகலமாய் மகிழ்ச்சியும் நிறைந்ததாய் அமையும் என நாங்கள் யாருமே நினைத்திருக்கவில்லை ஆம். மணவாழ்வில் இணைந்து பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு இனிய நிகழ்வு நிகழ்ந்தாது. அது எனது மனைவியின் தம்பியும் எனது தமையனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வில் நிகழ்வு முடிந்து அனைத்து சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஒருபுறம் அளவலாவிக்கொண்டிருக்க ஒரு புறம் விருந்து வைபோகம் தடா புடலை நடந்துகொண்டிருக்க வரவேற்ப்பு நிகழ்வில் மணமக்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகள் ஓரமாய் வைக்கப்பட்டிருந்தது. திடீரென என் மனதில் ஒரு சிறு பொறி காதலாய் மலர்ந்தது என் இல்லத்தரசியை ஓரக்கண்ணால் பார்த்து, என்ன பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிகழ்வு நினைவிருக்கிறதா என்றேன் கண்களின் பார்வையாலேயே,
ம்ம்ம் மறக்க முடியுமா அந்த இனிய பொன்னாலை என்பது போல இருந்தது என் மனைவியின் கண்நோரப்பார்வை, ஓரமாய் வைக்கப்பட்டிருந்த மாலையை கண்கலால் சைகையால் காண்பித்து மீண்டும் ஒரு முறை அதை நினைவு கொள்வோமா என்பது போல சொன்னதே தாமதம் என் சைகையை மனதளவில் புரிந்த என் துணை என் மறு சைகைக்கு எதிர்பாராமல் ஒரு மாலையை எடுத்து எனக்கு எனிவித்ததை கண்டு உறவுகளும் நட்புகளும் ஒரு நொடி இன்ப அதிர்ச்சி அடைந்து மறு நொடியே கரங்களை தட்டி ஆரவாரம் செய்ய துவங்கிய அடுத்த கணம் எனது கரங்களால் மாலையை எடுத்து அவளுக்கு அணிவித்து பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு இளைய தம்பதியாய் அனைவருக்கும் காட்சி தந்தோம்.
குழுமி இருந்தோரின் மகிழ்ச்சி ஆரவாரம் எண்களின் அன்பிற்கு மேலும் வலுவூட்டி எண்களின் பழைய காதல் நினைவுகளை மலரும் நினைவுகளாக மலர செய்தது. மனமகில்ச்சியுடனும் நல்ல புரிதலுடனும் இருந்தால் எல்லா நாளும் பிப்ரவரி 14 தான் என்பது நிதர்சனமான உண்மை. இருந்தாலும் அந்த இனிய மாலைப்பொழுது அனைத்து நாளுக்கும் கிரீடம் வைத்தார் போல என்றென்றும் மறக்க முடியாத நாளாகி போனதென்னவோ உண்மை.
#LoveAndLaughter activity in my Life
Comments