செம்பரம்பாக்கம் ஏரி - சென்னையின் தாகம் தீர்க்கும் ஏரி.
கடந்த நவம்பர் டிசம்பர் மாதம் சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி திட்டமிடப்படாமல் திறந்து விடப்பட்டதே என்ற விவாதங்கள் சற்றே அடங்கியுள்ள நிலையில் பொங்கல் தினத்தன்று சென்னை மக்களான நமக்கெல்லாம் தண்ணீர் வழங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை காணும் வாய்ப்பு கிடைத்தது, கோரதாண்டவம் ஆடிய ஏரி மிகவும் சாந்தமாய் அமைதியாய் லட்சக்கணக்கான காண அடி தண்ணீரை தனக்குள் இருத்திக்கொண்டு அமைதியாய் காட்சி அளித்தது. பொங்கல் விடுமுறை ஆதலால் பெரும்பாலான சென்னையை சுற்றிய பொதுமக்கள் குடும்பத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியை காண வந்திருந்து ஏரியை சிறு சுற்றுலாத்தலமாக மாற்றி இருந்தனர். ஆங்காங்கே சுட சுட மீன் வறுத்து விற்பனை அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. தூண்டிளிட்டும் துணிகளை விரித்து வைத்தும் ஏரி கரை ஓரங்களில் மீன்களை பொழுதுபோக்கிற்காக பிடித்துக் கொண்டிருந்தனர். ஆறேழு காவலர்கள் பொதுமக்கள் யாருக்குள் இரங்கி விடாமல் பாதுகாத்து தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். ஏரியின் அழகு பறந்து விரிந்த அலைகள் இல்லாத கடலை போன்று காட்சி அளித்தது.
19 கண் மதகு மற்றும் 5 கண் மதகு இரண்டு இடங்களிலும் மதகுகள் முழுமையாக மூடப்பட்டிருந்தது, கடந்த டிசம்பரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோது இம்மதகுகள் அனைத்தும் திறந்து விட்டிருந்த பொழுது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கவே பிரம்மிப்பாய் இருந்தது. சென்னையை புரட்டிப்போட்ட வெல்ல ணீர் இவ்வழியே தானே சென்றது என்று கற்பனை செய்து பார்க்க நேரில் காணாவிட்டாலும் அந்த தண்ணீர் புரண்டோடிய காட்சியை கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஏரியின் அனைத்து மதகுகளும் திறந்து விடும் சமயங்களில் அந்த தண்ணீர் சென்னை நகரை நோக்கி வரும் வழிகளில் பல ஆக்கிரமிப்புகள் இருக்கிறது அதை அகற்ற வேண்டும் என்று விவாதித்துக் கொண்டிருக்க ஏரியின் மதகுக்கு முன்னூறு மீட்டர் தொலைவிலேயே எந்த துணிச்சலில் பல அடுக்கு அடுக்கு மாடி வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை, அதன் வேலைகள் பாதி முடிந்த நிலையில் வேறு உள்ளது. கடந்து போன வெள்ளத்தில் அந்த கட்டடங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருந்தது என்று அங்குள்ள கிராமத்தினர் கூறுகின்றனர், அப்படிப்பட்ட இடத்தில் பொதுமக்கள் எந்த தைரியத்தில் வீடுகளை வாங்குகிறார்கள்? அந்த கட்டிடங்கள் கட்ட எப்படி அரசு அனுமதி கிடைத்தது? விடை காண முடியா கேள்வி, இனியாகிலும் இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகள் நடக்கா வண்ணம் பார்ஹ்த்டுக்கொல்வது அரசாங்கத்தின் கடமையாகும்.
ஏரியின் கரைகள் பலமுள்ளதாகவே உள்ளது, எனினும் அடிக்கடி கரைகளை கண்காணித்து பலப்படுத்துவது அவசியமாகும், மேலும் நிரந்தரமாக ஒரு காவல் கண்காணிப்பு மையம் அங்கெ நிறுவுவதும் அவசியம் என்றே தோன்றுகிறது. சென்னைக்கு தண்ணீர் வழந்கு௭ம் மிக முக்கியமான ஏயர்யாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கரைகளை பாதுகாப்பது மற்றும் தண்ணீருக்குள் மாசு ஏற்படாமல் கண்காணிப்பது, பொதுமக்கள் தண்ணீரில் இறங்காவண்ணம் தடுப்பது போன்ற பல காரணங்களா கண்காணிக்க நிரந்தர கண்காணிப்பு மையம் அவசியம். பொதுமக்களும் ஏரிக்குள் பிளாஸ்டிக் கவர்கள் போன்றவற்றை போடாமல் நமக்கு குடிநீர் வழங்கும் ஆதாரத்தி காப்பது அவசியம்.
சுற்றுலா போன்று ஏரியை மக்கள் காண வருவதால் குப்பைகள் அங்கெ சேருவது தவிர்க்க இயலாதது எனவே அரசு ஏரியை கண்காணித்து சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று நமக்கெல்லாம் குடிநீர் ஆதாரமாய் விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியை காண கிடைத்த வாய்ப்பு பொங்கல் பண்டிகையை மேலும் சிறப்பாக்கியது.
Comments