சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”
ஊரிலிருந்து வந்திருந்த எங்க விவசாயி அன்ன கேட்டாரு. “எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…” “மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?” “ஆமாண்ணே.. எப்படிண்ணே..” “உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?” “என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…” “பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…” “ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…” “ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.” “நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..” “உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…” “உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…? “என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?” “ம்… குரூட் ஆயிலிலிருந்து…” “ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…” “கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.” “எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?” “இல்லைண்ணே..” “பாரு… உண்மை புரியும்…” “ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…” “ லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…” “என்னா தெரியும்…” “ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…” “ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.” “டேய் முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடே… நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…” ”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…” “ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…” “எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…” “யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..” “ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…” “ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”
“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…” “கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… ஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…” “ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..” “டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…” “இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…” “ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே. இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?” “எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…” நம்ம மக்களுக்கும் உரைக்கனுமே...ஹ்ம்ம்ம்......

Comments

Unknown said…
நாங்கள் புதிய பலசரக்குகடை திறக்க உள்ளதால்போன்நம்பர்வேண்டும்
8428905430,6380242374

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்