பேரிடர் மழையால் சென்னை பெற்றிருக்கும் நன்மைகள்..

Visit blogadda.com to discover Indian blogs

பேரிடர் மழையால் இனி சென்னையில் நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்:




1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..!

2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட் ஆனால் கூட, ‘ஷிட்...! நான்சென்ஸ்..!’ என்று கத்துபவர்களுக்கெல்லாம் கூட தாம் பொறுமையோடு நாட் கணக்கில் இருக்க முடியும் என்பது் தெரிந்திருக்கும்..! பொறுமை கரண்ட்டினும் பெரிது..!
3. நம் பக்கத்து வீடுகளில்/ஃப்ளாட்களில் மக்கள் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் குரல் எப்படி இருக்கும் என்பதையும் இப்போதுதான் பலர் தெரிந்து கொண்டிருப்பார்கள்..!
5. ரொம்ப நாட்களுக்கு பிறகு, மருமகள்கள், மாமியாருக்கு போன் பண்ணி ‘எப்படி இருக்கீங்க அத்தே..?” என்று கேட்டிருப்பார்கள் (எப்படி இருந்தாலும் புருஷன் வீட்டை விட்டு வெளியே போகமுடியாது என்பதால்..!). இருந்தாலும் அந்த ‘நல்லெண்ண’ gestureரினால், உறவுகள் கொஞ்சம் மேம்படும்..!

4. பல காலங்களுக்கு பிறகு, கணவன், மனவி, மகன், மகள், வேறு வழியில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து, பார்த்து பேசிக்கொண்டதில், சில பிணக்குகள்/பிரச்சனைகள் தீர்ந்திருக்கும்..! 6. மொபைல் மட்டும் இல்லாவிட்டால், பாடங்கள் படிக்க ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கிடைக்கும் என்பதை இளைஞர்/இளைஞிகள் புரிந்து கொண்டிருக்கலாம்..!
9. ஐ.டி, மார்க்கெடிங், டீச்சிங், அட்மின், போன்ற வேலைகளையெல்லாம் விட முக்கியமான வேலை எது என்பதை- சாக்கடை க்ளீன் பண்ணுபவர்கள், EB ஆட்கள் பின்னாடி அலைந்ததில் பலர் தெரிந்து கொண்டிருப்பார்கள்..!

7. பலருக்கு, வெளி நாட்டினரைப் போல, ‘Black Coffee’ குடிக்கும் பழக்கம் வந்திருந்து அதை தொடர்வது ஹெல்த்திற்கு நல்லது..! 8. தண்ணீர் குடிக்க மட்டும் அல்ல, ........... என பல விஷயங்களுக்கு அத்தியாவசிய தேவை என்பது புரிந்து பலர் இனி தண்னீரை மரியாதையுடன் கையாளுவர்..!
10. ஓலாவெல்லாம் வெறும் பீலா..! உபெர் கிட்ட இல்ல பவர்! நம்ம பல்லவன்தான் என்றென்றும் வல்லவன் என்பது உறைத்திருக்கும்..!

11. இப்போதைக்கு ரியல் எஸ்டேட் விலை ஏறாது..! ஸ்டாக் மார்க்கெட்டும், கோல்டும் ஏற்கனவே சரியில்லை..!. அதனால் கையிலிருக்கும் பணத்தை ஜாலியாக செலவழித்து சந்தோஷமாய் இருக்கலாம்..!
12. ‘Old is gold’ என்பது எவ்வள்வு உண்மை என்பதை பலர் புரிந்து கொண்டிருப்பர் – லாந்தர்/எண்ணெய் விளக்கு, மூன்று நாள் பாட்டரி வரும் பழைய நோக்கியா, கைவிசிறி, பாய், உப்புமா இவற்றின் வலிமை புரிந்திருக்கும்.

நன்றி மழையே எங்களை எங்களாக அடையாள படுத்தியதற்கு!"

Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்