ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நிறுத்துவோம்...
பல ஆண்டுகளாக ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் இந்தியர் மத்தியில் இருந்துவருவது மிகவும் கவலைக்குரியதாகும் இந்நிலையில் சில தினங்களாக ரூபாய் நோட்டுகளில் எழுதி இருந்தால் அது செல்லாது என்ற வதந்தியும் பரவி வருகிறது அது குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், அந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலும் அவை பண பரிமாற்றத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் எவ்வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.
இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், அந்த தகவல் உண்மையில்லை. ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தாலும் அவை பண பரிமாற்றத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படும். மக்கள் எவ்வித அச்சமின்றி பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் என்றார்.
மேலும், இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எவ்வித அறிவிக்கையும் வெளியிடவில்லை என ஆடியோ வடிவில் வெளியிட்டுள்ள தகவலில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால், நோட்டுகளின் ஆயுள் குறைந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக இப்பழக்கம் இந்த்யர்களின் மத்தியில் மட்டுமே உள்ளது மிகவும் கவலை தரக்கூடியது எனவே இனியாகிலும் ரூபாய் நோட்டுகளில் எழுதுவதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பலரது ஆசையாக இருக்கிறது.
Comments