மீண்டெழுந்த சென்னை மீண்டும் வீழாமல் பாதுகாப்போம்
நூற்றாண்டு காணாத மழையால் நிலைகுலைந்த சென்னை மீண்டும் மீண்டெழுந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த பேரழிவிற்கு காரணம் ஆளும் ஆட்சிதான் என்று எதிர்கட்சிகளும், இல்லை இல்லை கடந்தகால ஆட்சியின் தவறான செஇயல்பாட்டால் தான் இப்படி நடந்தது என்று ஆளும் கட்சியும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும் விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டும் இருக்கின்றன, அவர்களுக்கு மக்களின் மேல் உள்ள அக்கறையின் பேரில் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்களா அல்லது எதிர்வர இருக்கும் பொதுத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்களா என்பது பொறுமையாக இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவி பொது ஜனங்களுக்கு தெரியாமல் இருக்காது.
நடந்தது நடந்துவிட்டது இனிமேல் நடப்பது நல்லபடியாக அமைய வேண்டும் என்பதே சாதாரண பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது, சென்னையை உலுக்கி எடுத்த மழையால் கட்டிய உடை தவிர தங்களின் உடைமைகள் அனைத்தையும் இழந்தவர்கள் லட்சக்கணக்கான பொதுமக்கள், இப்போதைய அவர்களின் அவசர தேவை உடனடியாக அவர்களின் இருப்பிடத்துக்கு உத்தரவாதம் அளித்து அவர்கள் இழந்த அனைத்து பொருட்களையுமே அரசாங்கம் கொடுப்பது சாத்தியம் இல்லை என்றாலும் அடிப்படை தேவைகள் அனைத்தயுமாவது பூர்த்தி செய்து தர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக இருக்கிறது .
இந்த மழையில் நம் தெளிவாக கண்ட ஒரு நல்ல விஷயம் மனிதநேயம் பரவலாக வெளிப்பட்டது என்பதே, அதுவே ஒரு ஆறுதலான விஷயமும் கூட. மக்களின் தேவைகளை ஓரளவுக்கு இதுவரை பொதுமக்களும், தன்னார்வம் மிக்க தொண்டு அமைப்புகளும், போர்க்கால அடிப்படையில் திடீரென முளைத்த தன்னார்வ தொண்டு அமைப்புகளும் பூர்த்தி செய்கிறது, இனியும் செய்வார்கள் என்பதே உண்மை, இன்னொரு முறை இப்படி ஒரு பேரழிவை நாம் எப்படி தடுப்பது என்பதே தற்போது அனைவரின் முன்னரும் இருக்கும் கேள்வி.
இந்த நூறாண்டுகால பேரழிவு தானாக நடக்கவில்லை நூராண்டுகாலமாக நாம் இயற்கையை சிறிது சிறிதாய் அழித்து வந்ததின் விலையை நாம் கொடுத்திருக்கிறோம் அவ்வளவே. நூராண்டுகாலமாக இயற்கை தந்த கொடையான ஆறு, குளம், ஏறி போன்றவைகளை மெல்ல மெல்ல நாம் ஆக்கிரமித்ததின் விளைவை ஒரே நாளில் அது பலனாக தந்திருக்கிறது இனி வரும் காலங்களிலாவது இயற்கையை நாம் பாதுகாக்க வேண்டும் ஆற்றின் கரை ஓரங்களில் ஆக்கிரமிப்பதையும், மணல் கொள்ளைகளையும் அறவே தடுத்து நிறுத்துவது தான் இனிமேல் மீண்டும் ஒரு பேரழிவு வராமல் தடுக்கும் சிறந்த வழி, மட்டுமல்லாது சிறிதும் பாரபட்சமின்றி இது வரை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் சிறிதும் பாரபட்சம் இன்றி களைந்து எடுக்க வேண்டும் இதை நாம் செய்ய தவறுவோமானால் மீண்டும் ஒரு பேரழிவு வருவதை யாராலும் தடுக்க இயலாது என்பதே நிதர்சனம்.
Comments