சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்
ஆனந்தம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எவ்வித வியாபார நோக்கமும் இன்றி சமுதாய
சிந்தனையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறும்படங்களையும் இயக்கீயது நான் என்ற வகையில் பெருமைப்படுகிறேன், இப்படங்களின் இயக்குனர் என்ற முறையில் இங்கே நான் இதை அணுகாமல் சாதாரண பொது பார்வையாளனாய் இம்மூன்று படங்களையும் விமர்சித்திருக்கிறேன் என்று சொல்வதை விட விவரித்திருக்கிறேன், தாங்களும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பாபு
ஆனந்தம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் எவ்வித வியாபார நோக்கமும் இன்றி சமுதாய
சிந்தனையுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்மூன்று குறும்படங்களையும் இயக்கீயது நான் என்ற வகையில் பெருமைப்படுகிறேன், இப்படங்களின் இயக்குனர் என்ற முறையில் இங்கே நான் இதை அணுகாமல் சாதாரண பொது பார்வையாளனாய் இம்மூன்று படங்களையும் விமர்சித்திருக்கிறேன் என்று சொல்வதை விட விவரித்திருக்கிறேன், தாங்களும் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பை பற்றியும் குழந்தை தொழிலாளர்கள் சமூக விரோத சக்திகளால் எப்படியெல்லாம்
ஆட்டிப்படைக்கப் படுகின்றனர்
என்பதை பற்றி சுருக்கமாகவும் தெளிவாகவும் 23 நிமிடங்களில்
எடுத்து சொல்லப்பட்டிருக்கும் குறும்படம் தான் பாபு.
இதில் நடித்திருக்கும் அனைவருக்குமே இது முதல் அனுபவம் என்பதும், இதை இயக்கிய எனக்கும் இது முதல் அனுபவம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பாபுவாக நடித்திருக்கும் 12 வயது சிறுவனான ஆலென் சாம் நடித்திருக்கும்
முதல் படம் என்றால் நம்பவே இயலாது அந்த அளவிற்கு அவரின் நடிப்பு பார்ப்போரின் நெஞ்சை கரைய செய்கிறது அதுவும் தன்னை கொடுமைப்படுத்தும் அம்சவேணி தனது சொந்த அம்மாவ இருப்பினும் அதை வெளிக்காட்டாமல்
இயல்பாக நடித்திருப்பது
படத்திற்கு வலு சேர்க்கிறது. திரை உலகில் நல்ல ஒரு எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது வாழ்த்துக்கள். அடுத்து இப்படத்திற்கு வலு சேர்ப்பது பாபுவை கொடுமைப்படுத்தி
சமூக விரோத செயல்களை செய்து வரும் சென்னைவாசி பெண் அம்சவேணியாக
நடித்திருக்கும் ஆலிஸ்., படப்பிடிப்பை கூட இதுவரை நேரில் பார்த்திராத இவரின் நடிப்பு மிரள வைக்கிறது அதிலும் குறிப்பாக பாபுவை கொடுமைப்படுத்தும் காட்சிகளில்
தனது சொந்த மகன் என்றும் பாராமல் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் பாய்ன்ட் .
அடுத்தபடியாக
இக்குறும்படத்தில் துணை இயக்குனராக பனி புரிந்திருக்கும்
பூஜா ராமகிருஷ்ணன்
படத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருக்கிறார், நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும், மிக பெரிய எதிர்காலம் திரை உலகில் அவருக்கு காத்திருக்கிறது,
அடுத்ததாக இப்படத்தில் அதிகாரியாக வரும் இளங்கோவன் அவர்களுக்கு அனுபவம் அனுபவம் என்ற இன்றி இப்படத்திற்கு வலு வாழ்த்துக்கள்.
வரும் காலங்களில் திரை உலகில் மிக சிறந்த நடிகராக வளம் வருவார் என்பதற்கு அவர் தற்போது சின்ன திரையில் பல தொடர்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வருவதே சாட்சி. மொத்தத்தில்
இதில் நடித்திருக்கும்
அனைவருமே தனக்களித்த பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும், குழந்தை தொழிலாளர்களின்
வலியையும் அதற்க்கான தீர்வையும் செலவின்றி மிக தெளிவாக சொல்லப்பட்ட படம் இது, நீங்களும் இதை பார்த்து தங்களின் கருத்துக்களை
பகிர்ந்து கொள்ளுங்கள்.
நம்மை நாமே அழிக்கலாமா?
தற்போது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமுதாய சீர்கேடாய் கருதப்படும் மதுப்பழக்கம் பற்றியும் அதன் கொடுமையை பற்றியும் 16 நிமிடங்களில் சொல்லப்பட்ட மதுவிலக்கிற்கு ஆதரவான ஒரு குறும்படம் இது.
துவக்க காட்ச்சியிலேயே மதுவின் அசிங்கத்தை நமக்கு கண்முன்னே படம் பிட்த்து காட்டப்பட்டுள்ளது, முந்தைய படத்தில் நட பாபுவாக நடித்த ஆலன் சாம் இதிலும் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சபாஷ் வாங்கி இருக்கிறார். மது என்னும் அரக்கன் ஒரு குடும்பத்தில் நுழைந்து விட்டால் அந்த குடும்பம் எப்படி சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகிறது என்பதை தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது, மதுவிலக்கை பற்றி வாய் கிழிய அனைவரும் பேசி வரும் இந்த தருணத்தில் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது இந்த படம்.
மதுவிலக்கை கொண்டு வந்தாலும் சரி, கொண்டு வராவிட்டாலும் சரி, தனி மனிதனாய் உணர்ந்து மதுப்பழக்கத்தை விட்டு ஒழிக்காவிட்டால் இந்த சமுதாயத்தில் இருந்து மதுவை ஒழிக்கவே முடியாது என்ற தெளிவான கருத்துடன் இக்கதை சொல்லப்பட்டிருக்கிறது, பார்த்து உங்கள் கருத்துக்களை பகிரவும்.
"LET HIM STUDY"
"LET HIM STUDY"
YES FOUNDATION என்னும் அமைப்பு நடத்திய குரும்படப்போட்டிக்காக எடுக்கப்பட்ட 3 நிமிட சிறு குறும்படம் LET HIm STUDY , இது அவர்கள் சவாலாக கொடுக்கப்பட்ட 101 மணி நேர சவாலை ஏற்று ஆனால் 87 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்டு வெளியிடப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த குறும்படம், படிக்க வேண்டிய குழந்தைகளை வேளைகளில் ஈடுபடுத்தி அவர்களின் கல்வி அறிவை விற்று காசு பார்க்கும் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி குறும்படம் இது.
3 நிமிட மொத்த படமும் வீட்டிற்குள்ளேயே வைத்து எடுக்கப்பட்டது இப்படம். கல்வி கற்க எங்கும் சிறுவனாக மீண்டும் பாபுவில் நடித்த ஆலன் சாம் நடித்துள்ளார் நடிப்பில் மெருகேறி இருக்கிறது என்றே சொல்லலாம். இப்படம் வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களுடன் உங்களின் மேலான கருத்துக்களை வேண்டி நிற்கிறது.
3 நிமிட மொத்த படமும் வீட்டிற்குள்ளேயே வைத்து எடுக்கப்பட்டது இப்படம். கல்வி கற்க எங்கும் சிறுவனாக மீண்டும் பாபுவில் நடித்த ஆலன் சாம் நடித்துள்ளார் நடிப்பில் மெருகேறி இருக்கிறது என்றே சொல்லலாம். இப்படம் வெற்றி பெற உங்கள் வாழ்த்துக்களுடன் உங்களின் மேலான கருத்துக்களை வேண்டி நிற்கிறது.
Comments