பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக...!!!!
பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்பு மற்றும் பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுக்காக PINKATHON என்ற பெயரில் வரும் டிசம்பர் 13 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஓடும் மாரத்தான் போட்டி...!!!
பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்பு மற்றும் பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுக்காக PINKATHON என்ற பெயரில் சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் PINKATHON என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது அவ்வகையில் வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மும்பையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பெண்களுக்காக பெண்களால் ஒடப்படும் போட்டி நடைபெற உள்ளது, இதன் சிறப்பு AMBASSODOR ஆக ஹிந்தி திரைப்பட நடிகர் மிலின்ட் சோமன் அவர்கள் நியமிக்கப்பட்டு வெகு சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, இதில் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை சிறப்பிக்க மும்பையை சேர்ந்த பெண்கள் பலர் தயாராகி வருகின்றனர்.
இந்த ஓட்டம் ஓடுபவர்களின் இயல்பு தன்மைக்கேற்ப 3KM, 5KM, மற்றும் 10KM ஆகிய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இன்று நாம் எவ்வளவுதான் விஞ்ஞான உலகில் வளர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் இந்திய நாட்டில் இன்னும் பெண்கள் தங்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை முழுவது பெறாதவர்களாகவே உள்ளனர், இப்படிப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்த குறையினை பெரிதளவும் நீக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. திரு. மிலின்ட் சோமன் போன்ற பிரபலமானவர்கள் இதில் கலந்து கொண்டு கலந்து கொள்ளும் அனைவரையும் உற்சாகபடுத்துவதால் இந்நிகழ்ச்சி மேலும் மெருகேறி சிறப்பிக்கிறது.
இந்த மாரத்தான் ஓட்டத்தில் சாதாரண பெண்கள் கலந்துகொள்வதொடு மட்டுமில்லாமல் மாற்றுத்திரநாழி பெண்களும் கலந்து கொள்கின்றார்கள் என்பது மலைக்க வைக்கும் விஷயமாகும், தாங்களும் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிக்கிறார்கள் மாற்றுத்திரனாளிகள்.
மாற்றுத்திரனாளிகள் மட்டும் இன்றி இதில் கலந்து கொள்ளும் பெண்கள் தங்கள் கைக்குழந்தையோடு வந்து இந்த ஓட்டத்தில் கலந்து கொள்வது சமுதாயத்தின் மேல் அவர்களுக்கு உள்ள அக்கறையை நமக்கு தெளிவாக்குகிறது.
இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு அந்தந்த மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து இதை நடத்துபவர்களை தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களாகிய அனைவரின் விருப்பமாக திகழ்கிறது.
Comments