மிரட்டும் டெங்கு காய்ச்சல் - எச்சரிக்கை...!!!!

மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது பழமொழி ஆனால் இங்கே மழையும் விட்டபாடில்லை மழையினால் மக்கள் படும் வேதனைகளும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அனைவரும் மிரட்டக்கூடிய ஒரு விஷயம் கொசுவினால் ஏற்ப்படும் 'டெங்கு  காய்ச்சல்".
இந்த டெங்கு காய்ச்சல் பற்றி நாம் அறிந்து கொண்டு விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது. இந்த டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

தோற்று நோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்கு கேடு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி கூட்டரிகுறி என்பன உண்டாகும். நோய் பாதித்தவரை கடித்த கொசு மற்றவரை கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. இரத்த மாற்று சமயங்களிலும் இந்நோய் பரவுகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்றியவரை தொடுவதால் இந்நோய் பரவுவதில்லை.
நோயின் அறிகுறிகள்:
தீவிரமான கண் வலி, கடுமையான மூட்டு வலி, தசைவலி, வாந்தி, தோல் சிவத்தல், வெள்ளை அணுக்கள் இரத்த வட்டுக்கள் குறைதல், மிதமான இரத்த போக்கு, மூக்கில் இரத்த போக்கு, சிலருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் இல்லாத காய்ச்சல் நிலை ஆரம்ப நிலை தேங்கி காய்ச்சல் நிலை, 

விழிப்புணர்வு தேவை:

பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டின் அருகே தண்ணீர் எந்த வகையிலும் தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வீட்டை சுற்றி தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கும் இந்த கொசு பகல் நேரத்தில் தான் கடிக்கும்  உடல்வலி,முதுகுவலி, காய்ச்சல், திடீர் குளிருடன் காய்ச்சல் உடலில் சிகப்பு புள்ளிகள் போன்றவையும் இக்க்காயச்சலுக்கு அறிகுறிகளாகும் விழிப்புடன் இருக்கவும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி இரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நலம், தாங்களாகவே மருந்து கடைகளில் மருந்துகள் வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.பப்பாளி இல்லை ஜூஸ் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் போன்றவைகளை பருகுவது இக்காய்ச்சல் தீவிரத்தை குறைக்கும் மூலிகை தேநீரும் அருந்தலாம். மொத்தத்தில் இக்காய்ச்சல் வராமல் நாம் நம்மை காத்துக்கொள்ள நாம் வாழும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதே சிறந்த தீர்வாகும், எந்த இடங்களிலும் தண்ணீர் தென்கவிடாமல் இருப்பது நம்மை காத்துக் கொள்ள வழி வகுக்கும். 



Comments

Popular posts from this blog

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

சூரியகாந்தி (SUNFLOWER OIL) எண்ணெய் என்னும் மாயை....

எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Amazing LG V20 LGH990DS (Titan) from LG

சமுதாய நோக்கோடு மூன்று குறும்படங்கள்