Posts

Showing posts from November, 2015

மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையில் சாதனைகள் படைக்கும் தமிழ்ப்பெண்

Image
திரைப்படங்களை பொருத்தவரை மேக்கப் என்பது இன்றியமையாத ஒன்றாகும் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை மேக்கப் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனாலும் ஹாலிவுட் ஆங்கில திரைப்படங்களில் செய்யும் அளவிற்கு இன்னும் மேக்கப் தொழில்நுட்பங்கள் முழுமையாக இந்தியாவிலோ அல்லது மற்ற நாட்டிலோ வளர்ச்சியடையவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த தமிழ்ப்பெண் தனலட்சுமி அவர்கள் இந்த மேக்கப் கலையில் மலேசிய திரைத்துறையை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது, ஒரு தமிழர் வியத்தகு சாதனைகளை மேக்கப் துறையில் செய்து வருவது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய ஒன்றே. ஹாலிவுட் அளவில் பல நவீன தொழில்நுட்பங்களை உபயோகித்து செய்யப்படும் மேக்கப்பிற்கு இணையாக மலேசிய திரைப்படங்களுக்கு மேக்கப் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். சாதாரண ஒப்பனைக் கலைஞராக தனது கலைப்பணியை தொடர ஆரம்பித்த தனலட்சுமி அவர்களுக்கு மேக்கப் கலை மீது உள்ள காதலால் மென்மேலும் தனது கலையை அனைவரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹாலிவுட் அளவில் செய்யப்படும் மேக்கப் போன்றவைகளை நம்மாலும் ஏன் செய்ய முடியாது என...

உங்கள் ஊரின் சிறப்பு உணவு எது?

Image
. தமிழ்நாடு கோவில்களுக்கு பெயர்போன ஒரு மாநிலம் அதற்கு அடுத்தபடியாக வாய்க்கு ருசியான உணவுவகைகளின் பிறப்பிடம் தமிழகம் என்றால் மிகையாகாது, அந்த வகையில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கு ஒரு சிறப்பு உணவு பெயர் பெற்றது அந்த வகையில் எனக்கு தெரிந்த உணவு வகைகளை பகிர்ந்துள்ளேன், தாங்களும் தங்கள் பகுதி சிறப்பு உணவுகள் இருக்குமாயின் பகிர்ந்து கொள்ளவும். "வடகறி " முதலில் தமிழகத்தின் தலை நகரான சென்னையை எடுத்துக் கொண்டால் வடகறி என்கிற கடலைபருப்பு  செய்யப்படும் இந்த உணவுப்பண்டம் இட்லி தோசை மற்றும் சப்பாத்தி போன்றவைகளுக்கு சிறந்த துணை உணவாகும். "கறி  தோசை" சென்னையை தொடர்ந்து கோவில்கள் நிறைந்த நகரான மதுரையை எடுத்துக் கொண்டோமானால் பல சிறப்புகளை பெற்றுள்ளது, முக்கியமாக தூன்கானகரம் என்று பெயர் பெற்ற மதுரையில் 24 மணி நேரமும் பசியாற உணவு கிடைக்கும். சிறப்பான உணவு வகைகளும் பல உண்டு, குறிப்பாக கோனார் கடை கரி தோசை சிறப்பு வாய்ந்தது.  "செட்டிநாட்டு உணவு வகைகள் " காரைக்குடி செட்டிநாடு அனைத்து உணவுகளுக்குமே சிறப்பு வாய்ந்ததாகும் குறிப்பாக அசைவ உணவுகள் மிகவும் உலகப்...

மிரட்டும் டெங்கு காய்ச்சல் - எச்சரிக்கை...!!!!

Image
மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்பது பழமொழி ஆனால் இங்கே மழையும் விட்டபாடில்லை மழையினால் மக்கள் படும் வேதனைகளும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அனைவரும் மிரட்டக்கூடிய ஒரு விஷயம் கொசுவினால் ஏற்ப்படும் 'டெங்கு  காய்ச்சல்". இந்த டெங்கு காய்ச்சல் பற்றி நாம் அறிந்து கொண்டு விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது. இந்த டெங்கு காய்ச்சல் தாக்கப்பட்டால் கடும் காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தோல் நமைச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். தோற்று நோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்கு கேடு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்கு காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சி கூட்டரிகுறி என்பன உண்டாகும். நோய் பாதித்தவரை கடித்த கொசு மற்றவரை கடிப்பதால் இந்த நோய் பரவுகிறது. இரத்த மாற்று சமயங்களிலும் இந்நோய் பரவுகிறது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் தொற்றியவரை தொடுவதால் இந்நோய் பரவுவதில்லை. நோயின் அறிகுறிகள்: தீவிரமான கண் வலி, கடுமையான மூட்டு வலி, தசைவலி, வாந்தி, தோல் சிவத்தல், வெள்ளை அணுக்கள் இரத்த வட்டுக்கள் குறைதல், மிதமான இரத்த போக்கு, மூக்கில் இரத்த போக்கு, சிலருக்கு உடல் முழுவதும் அர...

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அரிய புகைப்பட களஞ்சியம்

Image
கல்விக்கடவுள் காமராஜர் அவர்களின் அறிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜர் அவர்கள் வாழ்ந்த சென்னையில் உள்ள வீடு, தற்போது நினைவு இல்லமாக திகழ்கிறது. காமராஜர் அவர்கள் அன்றாடம் உபயோகித்த எளிய சிறு சிறு பொருட்கள் நினைவு இல்லத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. கர்மவீரர் குழந்தையாக இருந்த பொழுது உபயோகப்படுத்திய மாற தொட்டில். சட்டமன்ற உறுப்பினர்களோடு கயிறு இழுக்கும் போட்டி. தமிழ் திரைப்பட கலைஞர்களுடன் பெருந்தலைவர் அவர்கள். மறைந்த பாரத பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களுடன் கிங் மேக்கர் காமராஜர் அவர்கள். மறைந்த பாரத பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்களுடன் கர்மவீரர் காமராஜர்  எலிசபெத் ராணி இந்திய வருகையின் பொழுது  புரட்சி தலைவருடன் பெருந்தலைவர். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ அவர்களுடன் பெருந்தலைவர். ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திராகாந்தி அம்மையாருடன் பெருந்தலைவர். டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் இந்திராகாந்தி அம்மையாருடன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். தந்தை பெரியார...

பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக...!!!!

Image
பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்பு மற்றும் பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுக்காக PINKATHON என்ற பெயரில் வரும் டிசம்பர் 13 அன்று பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஓடும் மாரத்தான் போட்டி...!!! பெண்களின் மார்பக புற்றுநோய் விழிப்பு மற்றும் பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுக்காக PINKATHON என்ற பெயரில் சென்னை, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், டெல்லி ஆகிய இடங்களில் ஆண்டுதோறும் PINKATHON என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது அவ்வகையில் வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மும்பையில் இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பெண்களுக்காக பெண்களால் ஒடப்படும் போட்டி நடைபெற உள்ளது, இதன் சிறப்பு AMBASSODOR ஆக ஹிந்தி திரைப்பட நடிகர் மிலின்ட் சோமன் அவர்கள் நியமிக்கப்பட்டு வெகு சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, இதில் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை சிறப்பிக்க மும்பையை சேர்ந்த பெண்கள் பலர் தயாராகி வருகின்றனர். இந்த ஓட்டம் ஓடுபவர்களின் இயல்பு தன்மைக்கேற்ப  3KM, 5KM, மற்றும் 10KM ஆகிய  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இன்று நாம்...

கிறிஸ்துமஸ் பண்டிகை பிறந்தது எப்படி...!!!!

Image
கிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று...