எங்கே செல்கிறது நமது பண்பாடும் கலாச்சாரமும்???
உலக நாடுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமும் பண்பாடும் உலகமே போற்றும் கலாச்சாரமும் நமக்கே உரியது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் நாம், அந்த பெருமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மிக மோசமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிக்கையில் மனம் வேதனை அளிக்கிறது. பெண்ணை போகப்பொருளாய் பார்க்கும் உலகில் பெண்ணை தெய்வமாய் மதிப்பதோடு பூமித்தாய் என்று பூமியை பெண்ணுக்கு ஒப்பாய் வணங்கி வரும் நமது பண்பாடும் கலாச்சாரமும் ஒரு சில பெண்களால் சீரழிந்து வருகிறது. மது அருந்துவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்ற இவ்வேளையில் தான் ஆண்களுக்கு சமமாக நாங்களும் மது அருந்துகிறோம் என்று பெண்களில் சிலர் அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் இந்த மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆகி வருவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனாலும் ஆண்களே கூட மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான கருத்து அப்படி இருக்கையில் குடும்பத்தின் ஒளிவிளக்காக திகழும் பெண்கள் இந்த விஷயத்தில் ஆண்களுக்கு நிகர் நா...