Posts

Showing posts from September, 2016

சிறுநீரகத்தை பாதுகாக்கும் வீட்டு மருந்துகள்.

Image
சிறுநீரக பாதுகாப்பு: சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டியவை… சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டியவை… உடலில் இரத்தத்தைத் சுத்தப்படுத்தும் ஒரு முக்கிய உறுப்பு தான் சிறுநீரகம். இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அளவுக்கு அதிகமான தண்ணீரை பிரித்துத்தெடுத்து, சிறுநீர்பைக்கு அனுப்பிவிடுகிறது. இதற்கு சிறுநீரகம் நன்கு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், இரத்தத்தில் டாக்ஸின்கள் சேர்வதுடன், சிறுநீரக கற்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். எனவே சிறுநீரகங்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், சிறுநீர் வெளியேற்றம் அதிகரிக்கவும் ஒருசில உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். அந்த உணவுப் பொருட்கள் பின்வருமாறு… ■ எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை ஜூஸை தினமும் குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் வரும் வாய்ப்பு குறையும். மேலும் எலுமிச்சை சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட பெரிதும் உதவும். ■ தர்பூசணி தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இது அதிக அளவில் சிறுநீரை உற்பத்தி செய்து, உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ■ பெர்ரிப் ...

பல் வலிக்கு எளிதான வீட்டு வைத்தியம்...

Image
மனிதனின் உடம்பில் மிகவும் கடினமான பகுதி எதுவென்றால் எலும்புகளும், பற்களும் தான். ஆனால் இப்பகுதிகளில் வலி ஏற்பட்டால் தாங்கிக் கொள்வதும் மிகவும் கடினமானது தான். பல்வலி வந்தால் ஒரு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி எந்த பல்லில் வலி இருக்கிறதோ அந்த பல்லை சுற்றி வைத்துவிட்டு வாயை மூடிக்கொள்ளவும் சிறிது நேரத்தில் பல்வலி காணாமல் போய்விடும். எந்தப் பல்லில் வலி இருக்கிறதோ அந்தப்பகுதியில் வாயினுள் சர்க்கரை வைத்துவிட்டு, 18 மிளகை நன்றாக அரைத்து (அல்லது பொடி செய்து) கால் டம்ளர் தண்ணீரில் விட்டு காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை சிறிது நேரம் ஆற வைத்து விரல் சூடு தாங்கும் அளவிற்கு வந்ததும், வெளியே வலி இருக்கும் கன்னதின் பகுதியில் இந்த நீரால் நன்றாக தேய்க்க வேண்டும் பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம் * பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும். * ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்...

பழைய சோறு என்று இளக்காரமாக நினைக்க வேண்டாம்...

Image
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர ்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும். 4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கு...

நெஞ்சு சளியை விரட்டும் கற்பூரவள்ளி.

Image
தேவையான பொருட்கள் : கற்பூரவல்லிதழை - 10 இலைகள்  தேன் - சுவைக்கு  வெற்றிலை - 1  மிளகு - 5 முதல் 10 வரை  துளசி - 10 இலைகள் நெய் - ஒரு தேக்கரண்டி செய்முறை: கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடுநரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும். வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும். அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். மிக எளிதில் கிடைக்கும் மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தி குழந்தைகளுக்கு பக்க விளைவில்லா மருந்தை வழங்கி சளித் தொல்லையை போக்குவோம்

மணத்தக்காளி தரும் மணமான நன்மைகள்...

Image
மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட ்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குண...

எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?

Image
எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ? புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம். எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப் போம். ✔  இதை செய்வதற்க்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா பால் பொருட்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும். உதாரணத்திறக்கு பால், தேநீர், தயிர், மோர், வெண்னெய், சீஸ் போன்றவை. உடலிருந்து நச்சுகளை நீக்க வேண்டியது அவசியம். எனவே தவறாது இதை கடைபிடிக்க வேண்டும். ✔  சுத்தம் செய்வதற்க்கு முந்தைய நாள் இரவு ஒரு கப் மூலிகை தேநீரை குடிக்கவும். இது குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும். சுத்தம் செய்ய நுரையீரலுக்கும், உடலுக்கும் ஒய்வு தேவை. எனவே கடுமையான பயிற்சிகள், வேலைகளை செய்ய வேண்டாம். முதல் நாள்: ✔  இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றை 300 மில்லி தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு முன்பு குட...

கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். (BENEFIT OF CURRY LEAVES)

Image
கறிவேப்பிலை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஆகவே கறிவேப்பிலையை தூக்கி எறியாமல் தினமும் சாப்பிடுங்கள். ஆயுர்வேத மருத்துவத்திலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் வடிவிலோ எடுத்து வரலாம். தினமும் காலையில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித ்து, உடல் எடை வேகமாக குறையும். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று விழுங்கலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து நன்கு மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன், இஞ்சி சாறு சேர்த்து குடித்து வரலாம். இச்செயலால் மிகவும் வேகமாக உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

சீனர்களின் சுறுசுறுப்பின் மந்திரம் - முட்டைக்கோஸ்...

Image
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்... * பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது. * பச்ச ை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. * தயோசயனேட், கார்பினால், லுடின், ஸிசாந்தின், சல்பராபேன், இசோதயோ சயனேட் போன்ற ரசாயன மூலக்கூறுகள் முட்டைக்கோஸில் உள்ளது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும். * முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது....

சமையல் எண்ணெய் குறித்த சில அதிர்ச்சி உண்மைகள்...

Image
உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறத. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்... இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை ப ரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதியும் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. பெண்களின் இயல்பான ஹார்ம...

சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய்

Image
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால் அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச் சயம் உணர முடியும். * நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. * நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும். * நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும். * நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். * நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும...

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து

Image
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயா ரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது. வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்...

இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்...

Image
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சு றுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். 8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். 9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும். 10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும். 11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்....

முருங்கையின் பயன்கள்...

Image
முருங்கைக்காய போன்றே முருங்கைகீரையிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு இருமுறையாவது இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 1. முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் நீங்கும். 2 முருங்கையை சமைத்து சாப்பிட்டால் உடல் வலுப்பெரும். 3 இரத்தம் சுத்தமாகும். முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது. 4 உடல் மெலிவாக இருப்பவர்கள் வாரம் இரண்டு முறை முருங்கை கீரையை உண்டு வந்தால் உடல் தேறும். 5 முருங்கை இலையில் விட்டமின் ABC கால்ஷியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 6 ஒரு கிண்ணம் முருங்கை சாறில் 9 முட்டை அல்லது அரைக்கிலோ வெண்ணை அல்லது 8 டம்ளர் பாலில் அடங்கி இருக்கும் விட்டமின் A உள்ளது. 7 வயிற்று புண்ணை ஆற்றும். அஜீரண கோளாறுகளை போக்கி மலச்சிக்கலை நீக்கும். 8 இரத்தத்தில் கலந்து இருக்கும் தேவையில்லாத நீர்களை பிரித்து வெளியேற்றும். 9 சிறுநீரை பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் பக்க விளைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். 10 உடல் சூட...

வாழையின் நன்மைகள்...

Image
வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல ்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம். நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது. வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவ...

எளிதில் கிடைக்கும் அவரைக்காய் தரும் பலன்கள்..

Image
அவரைக் கொடி சாதாரணமாக எல்லாவிடங்களிலும் பயிராகவோ அல்லது தானாகவோ வளரும் ஓர் தாவரம் ஆகும். தென்னிந்திய வீடுகளில் உணவுக்கெனப் பெரும்பாலும் ஆடி மாத வாக்கில் விதை விதைத்து வைப்பர். சுமார் ஆறு மாத கால அளவில் அதாவது மார்கழி, தை மாத காலங்களில் கொத்துக் கொத்தாக காய்களும் வெள்ளை மற்றும் நீல நிறப் பூக்களும் கொண்டு அழகாகத் தோற்றம் தர வளர்ந்து இருக்கும். அவரைக்காய் பத்திய உணவாகக் கருதப்படும். அவரையை கறியாகவோ க ுழம்பாகவோ சமைத்துச் சாப்பிட மிக்க சுவை தருவதாக விளங்கும். அவரை என்னும் போது பொதுவாகக் கொடி அவரையைத்தான் குறிப்பிடுவது வழக்கம். ஆனாலும் அவரையில் பல வகைகள் உண்டு. அவற்றுள் சிலவாக கோழி அவரை, சப்பரத்தவரை, கொத்தவரை, சீனி அவரை, காட்டவரை, பூனைக்கால் அவரை, சீமை அவரை, முருக்கவரை, வாளவரை, பேயவரை, ஆட்டுக் கொம்பு அவரை, வெள்ளவரை ஆகியவற்றை கூறலாம். அவரையில் உடலுக்கு ஊட்டச்சத்தும் மருந்தும் ஆகும் பொருட்கள் மலிந்துள்ளன. அவரையில் “போலேட்” என்னும் விட்டமின் சத்து மிகுதியாக உள்ளது. ஒரு கப் அவரையில் ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்குத் தேவையான “போலேட்” விட்டமின் சத்தில் 44% அளவு உள்ளது. இந்த “போலேட்” தா...

புற்றுநோய் தடுக்கும் அவகோடா பழம்...

Image
பச்சை நிறத்தில் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும் அதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும். அவகேடோ பழம் :- இரத்த அழுத்தத்தை சீரா கப் பராமரிப்பதற்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உதவும். பொட்டாசிய சத்து உடலில் குறைந்ததால் தான் இரத்த அழுத்த பிரச்சனை வரும். அத்தகைய பொட்டாசியம் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என்று நினைக்க வேண்டாம். வாழைப்பழத்தை விட அதிக அளவிலான பொட்டாசியத்தை அவகேடோ பழம் கொண்டுள்ளது. எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இப்பழம் மிகவும் நல்லது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் :- அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் :- அவகேடோ பழத...

கொய்யா பழத்தின் நன்மைகள்...

Image
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது. * வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ப ோன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன. * கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும். மற்றும், குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம். * கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். * கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உ...

பிம்பிளிக்கி பிளாப்பி (PIMPILIKKA PILAPPI)

Image

Rathika Sitsabaiesan Canadian MP Speaking Tamil in Parliament

Image
Rathika Sitsabaiesan Canadian MP Speaking Tamil in Parliament 

LET HIM STUDY - YES FOUNDATION

Image

Nammai Naame Azhikkalama

Image

TAMIL SHORT FILM BABU - WITH ENGLISH SUB TITLES

Image
This Short film is dedicated to all the children who r suffering as child labourers as slave. Babu an orphan who is treated as slave by an arrogant lady hamsaveni whos work is to pocket the orphans to make them work as slaves for multi businesses . She behaves ruthless like a don and shelters under the shade of big heads.poor babu is now under her custody.. suffers a lot. One fine day he met his wellwisher who works in press and explained everything. She relieved babu and his friends after a big dispute legally... Like babu somany child labourers are there who r getting trapped in to this network connectors like hamsaveni. Dear friends if u come across such stories or children plz help them to get rid of this pathetic situations. Thank you Lovingly your vasantha kumar....