எங்கள் காதலை புதுப்பித்த அந்த இனிய குதூகலமான மாலைப் பொழுது.
“This post is a part of #LoveAndLaughter activity at BlogAdda in association with Caratlane .” https://youtu.be/ya3Z1AC1CHA அந்த மாலைப்பொழுது அப்படி ஒரு குதூகலமாய் மகிழ்ச்சியும் நிறைந்ததாய் அமையும் என நாங்கள் யாருமே நினைத்திருக்கவில்லை ஆம். மணவாழ்வில் இணைந்து பதினெட்டு வருடங்களுக்கு பிறகு அப்படி ஒரு இனிய நிகழ்வு நிகழ்ந்தாது. அது எனது மனைவியின் தம்பியும் எனது தமையனின் திருமண வரவேற்ப்பு நிகழ்வில் நிகழ்வு முடிந்து அனைத்து சொந்தபந்தங்கள் மற்றும் நண்பர்கள் ஒருபுறம் அளவலாவிக்கொண்டிருக்க ஒரு புறம் விருந்து வைபோகம் தடா புடலை நடந்துகொண்டிருக்க வரவேற்ப்பு நிகழ்வில் மணமக்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அலங்கார மாலைகள் ஓரமாய் வைக்கப்பட்டிருந்தது. திடீரென என் மனதில் ஒரு சிறு பொறி காதலாய் மலர்ந்தது என் இல்லத்தரசியை ஓரக்கண்ணால் பார்த்து, என்ன பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு நிகழ்வு நினைவிருக்கிறதா என்றேன் கண்களின் பார்வையாலேயே, ம்ம்ம் மறக்க முடியுமா அந்த இனிய பொன்னாலை என்பது போல இருந்தது என் மனைவியின் கண்நோரப்பார்வை, ஓரமாய் வைக்கப்பட்டிருந்த ...