Posts

Showing posts from January, 2016

என்னமோங்க..பாத்து செய்ங்க..

Image
அரசியலுக்கு அப்பாற்பட்டு சாதாரண மனிதனாக, தினமும் வாகனங்களில் பெட்ரோல் உபயோகப்படுத்தும் சாமானியனாக பொதுமக்கள் மனதில் எழும் மிக சாதாரணமான கேள்விக்கு பதில் சொல்லுங்கள் ஆளும் அதிபர்களே...!!! . 2011 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒருபேரலுக்கு 100 டாலர் இருந்த பொழுது இந்தியாவில் சராசரியாக பெட்ரோல் விலை ரூபாய்.59/- தற்போது 2016 இல். ஒருபேரல் கச்சா எண்ணெய் விலை 30 டாலர். இருக்கும் பொழுது, இன்று விலை சராசரியாக 59/-  . கலால் வரி பிலால் வரி அப்படின்னு தெரியாத வரி பத்தி எல்லாம் சாமானியனுக ்கு தெரியலங்க, 10/- ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கி 20 ரூபாய்க்கு வித்தா 20/- ரூபாய் லாபம்கிடைக்குமுங்க, அப்படி வித்த பொருள் இப்போ உங்களுக்கு 1/- ரூபாய்க்கு கெடைக்குதுங்க, ஆனாபாருங்க நீங்க இப்பவும் அதே 20/- ரூபாய்க்கு விக்கிறீங்க அப்போ உங்களுக்கு கூடுதலா ரூபாய் கெடைக்கிதுதானுன்களே..அந்த கூடுதல் லாபத்துல அட நீங்களும் கொஞ்சம் எடுத்துகிட்டு சாமானிய மக்களுக்கு ஒரு பாதியை குடுத்திங்கன்னா ஏதோ ஏழைபாழைங்க பொழச்சிப்போமுங்க...என்னமோங்க..பாத்து செய்ங்க.. -சாமானியன்-

செம்பரம்பாக்கம் ஏரி - சென்னையின் தாகம் தீர்க்கும் ஏரி.

Image
கடந்த நவம்பர் டிசம்பர் மாதம் சென்னையை  புரட்டிப்போட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி திட்டமிடப்படாமல் திறந்து விடப்பட்டதே என்ற விவாதங்கள் சற்றே அடங்கியுள்ள நிலையில் பொங்கல் தினத்தன்று சென்னை மக்களான நமக்கெல்லாம் தண்ணீர் வழங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை காணும் வாய்ப்பு கிடைத்தது, கோரதாண்டவம் ஆடிய ஏரி மிகவும் சாந்தமாய் அமைதியாய் லட்சக்கணக்கான காண அடி தண்ணீரை தனக்குள் இருத்திக்கொண்டு அமைதியாய் காட்சி அளித்தது. பொங்கல் விடுமுறை ஆதலால் பெரும்பாலான சென்னையை சுற்றிய பொதுமக்கள் குடும்பத்துடன் செம்பரம்பாக்கம் ஏரியை காண வந்திருந்து ஏரியை சிறு சுற்றுலாத்தலமாக மாற்றி இருந்தனர். ஆங்காங்கே சுட சுட மீன் வறுத்து விற்பனை அமோகமாய் நடந்து கொண்டிருந்தது. தூண்டிளிட்டும் துணிகளை விரித்து வைத்தும் ஏரி கரை ஓரங்களில் மீன்களை பொழுதுபோக்கிற்காக பிடித்துக் கொண்டிருந்தனர். ஆறேழு காவலர்கள் பொதுமக்கள் யாருக்குள் இரங்கி விடாமல் பாதுகாத்து தங்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். ஏரியின் அழகு பறந்து விரிந்த அலைகள் இல்லாத கடலை போன்று  காட்சி அளித்தது. 19 கண் மதகு மற்றும் 5 க...

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு:

Image
தமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்படும் அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு தசாப்தங்கள் முன் பே, இந்திய மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு வரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தால், வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் வீர வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும். பிறப்பு: ஜனவரி 3, 1760  பிறப்பிடம்: பாஞ்சாலங்குறிச்சி, தமிழ்நாடு, இந்தியா இறப்பு: அக்டோபர் 16, 1799 தொழில்: மன்னர், போராட்ட வீரர் நாட்டுரிமை: இந்தியா பிறப்பு பொம்மு மற்றும் ஆதி கட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியர். ஜெகவீ...

விவசாயின்னா இளக்காரமா???

Image
விவசாயின்னா இளக்காரமா??? . . ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க.... . 01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/ 02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/- 03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/ 04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/- 05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/- 06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500/-🐞🐜 07) களை எடுக்க.ரூ.600/- 08) அறுவடை ரூ.3000/- 09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/- மொத்தம் : ரூ. 19,750/- மொத்த உற்பத்தி/ ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ) அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/- லாபம் : ஏக்கருக்கு ரூ. 5750/- . மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான் இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான். ஊருக்கு சோறு🌿 போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் , . மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம். 🎋 -“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்” . - என்றார் திருவள்ளுவர். யாரும் யாரையும் தொழ வேண்டாம். உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தா...

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் போலி கூச்சல்

Image
விலங்குகள் நல ஆர்வலர்கள் என்று கூறிக்கொண்டு தமிழ் பாரம்பரிய ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் அர்த்தமில்லாத போலி கூச்சலிடும் சிலர் முதலில் இதற்க்கு பதில்சொல்லுங்களேன்...!!! . . 01. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் பணம் புழங்கும் குதிரை பந்தையத்தை தடை செய்ய கோருவீர்களா? . 02. ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் நீங்கள் நாடெங்கும் திருக்கோவில்களில் யானைகளை உபயோகப்படுத்துவதை தடை செய்ய கோருவீர்களா? . 03. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் ஆடு, கோழி, மாடுகள், பன்றிகள், மீன்கள் மற்றும் இன்னும் என்னென்னவோ உயிரினங்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடை செய்ய கோருவீர்களா?? . 04. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் வனவிலங்குகள் சரணாலயம் (Zoo) என்ற பெயரில் பல உயிரினங்களை இயற்கை சூழலில் இருந்து பிரித்தெடுத்து அடைத்து வைத்திருக்கிறார்களே, அதை தடை செய்ய கோருவீர்களா? . 05. ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரும் நீங்கள் நாடெங்கும் மக்களின் வீடுகளில் தென்படும் எலிகளை மக்கள் அடித்து கொல்கிறார்கள், எலிகளை கொள்ள தடை கோரி போராடுவ...

தினமும் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள். சுடுநீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும். சுடுநீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, சுடுநீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கொள்ளுங்கள். சுடுநீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்...