Posts

Showing posts from July, 2016

தினமும் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image
தினமும் சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சுடுநீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து , உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும் . எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள் . சுடுநீரைக் குடித்து வந்தால் , சளி , இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும் . எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து , சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும் . அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும ் வைத்துக் கொள்ளும் . சுடுநீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால் , மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம் . உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால் , சுடுநீர் குடியுங்கள் . இதனால் உடலின் வெப்பநிலை அதிக ரித்து , வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும் . இன்னும் சிறப்பான பலன் கிடைக்க , சுடுநீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து கொள்ளுங்கள் . சுடுநீரை ஒருவர் தினமும் குடித்து வந்த...

வெந்தையத்தின் மகத்துவம் (Fenugreek)

Image
நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவைகள் எவையென நாம் பார்ப்போம், இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்...

ஆரோக்கிய நல்வாழ்விற்கு நெல்லிக்கனி...!!!!

Image
இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......! தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......! . ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.......! . நெல்லிச்சாறுடன்பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.......! . ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.......! . அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும்,நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு.......! நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும...

தமிழ் பழமொழிகளின் ரீமிக்ஸ்...

Image
பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,  பழைய படத்த ரீமேக் பண்றாங்க,  அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்? அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.  அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.  ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு, இன்னைக்கு ‘cell’ போனாலே சொல் போச்சு’. பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!! புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்.. 😃 ******* பழசு: இளங்கன்று பயமறியாது..!! புதுசு: புது பேட்டரி சார்ஜ் இறங்காது.. 😃 ********* பழசு: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்..!! புதுசு: கொரியன் செட்டு கதறடிக்கும்.. 😃 ********* பழசு: தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு புதுசு: தாயும் பிள்ளையும் என்றாலும் போனும் ப்ளூடூத்தும் வேறு.. 😃 ********* பழசு: தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்.!! புதுசு: பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பினா, பொண்ணு ணிssணீஹ்வே அனுப்பும்.. ******** பழசு: அகத்தின் அழகு முகத்தில் தெரியும்..!! புதுசு: செல்போனின் அழகு சார்ஜ் நிற்பதில் தெரியும்.. ******* பழசு: ஆறிலும் ச...