மீண்டும் மழையா??? தாங்குமா சென்னை...!!!!!!!!
கடந்த பதினைந்திற்கும் மேற்பட்ட நாட்களாக பெய்திருந்த மழை ஓய்ந்து மூன்று நாட்கள் கூட முழுமையாக முடியவில்லை, பதினான்கு நாட்களுக்கு மேலாக பள்ளி செல்லாத மாணவ மாணவிகள் கடந்த இரண்டு நாட்களாக தான் இயல்பு நிலை திரும்பி பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். சென்னை நகர சாலைகள் மழைக்கு பல்லாங்குழி போல பெயர்ந்து காணப்படுகிறது அதை சரி செய்யும் பணியில் மாநகராட்ச்சி ஊழியர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் சென்னைக்கு வானிலை ஆய்வாளர்கள் தந்த பேரதிர்ச்சி தகவலாக உள்ளது வரும் ஞாயிறு முதல் புதன் வரை அதி கனத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்சென்னை வாழ்மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரசு இயந்திரங்கள் விழித்துக்கொண்டு மீண்டும் ஒரு பேரிடரை மக்கள் சந்திக்காத வண்ணம் காப்பாற்றுவது அவர்களின் கடமை. மக்களும் முன்னெச்சரிக்கையோடு செயல்படும் தருணம் இது. சென்னை வாழ் பொதுமக்கள் நீண்ட தூர பயணங்களை இன்னும் ஒரு வாரத்திற்கு தள்ளிப்போடுவது சிறந்ததாகும். மக்கள் தங்களுக்கு தேவையான அன்றாடம் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நலம் பயக்கும். அரசு தாழ்வான இடங்களிலும் ஏற்கனவே மழைக்கு பாதிக்கப்பட்ட இடங்களிலும் தனி கவனம் செலுத்தி வர இருக்கும் இயற்கை பேரழிவினை குறைத்துக் கொள்ள முடியும்.
அரசோடு இணைந்து பொதுமக்களும் ஒத்துழைத்து வர இருக்கும் இழப்பினை தடுக்க ஒன்று சேர்ந்து கரம் கோர்த்து செயல்படுவோம்.
Comments