மழை தந்த சவாலில் சென்னை - தவறுகள் திருத்தப்படுமா?
இயற்கைக்கு முன்னர் மனித சக்தியோ மனிதன் செய்த செயற்கை சக்தியோ என்றும் ஒன்றுமே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை மழையால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு, கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இடைவெளிக்கு பிறகு சென்னை கண்டிருக்கும் மிகப்பெரிய மழை இது என்பது நிதர்சனம். அனைத்து வகையிலும் சென்னை நகரமே ஸ்தம்பித்து போனது உண்மை. சென்னை மற்றும் பல புறநகர் பகுதிகள் தீவாகிப்போனது அடிப்படை வசதிகள் கிடைக்கபெராமல் மக்கள் பெரிதும் திண்டாடிப் போனார்கள், பெரும்பாலான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை இழந்து உயிர் பிழைத்தால் போதும் என மக்கள் நிர்கதியாய் நின்றனர். வானிலை ஆய்வாளர்கள் முன்னெச்சரிக்கை செய்தும் அதை அலட்சியம் செய்துவிட்ட அரசாங்க கருவிகளும் செய்வதறியாது விழித்தன என்பதே மிகவும் வேதனையான விஷயம்.
சென்னையும் சென்னையை சுற்றியும் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் அனைத்தும் முறையாக தூர் வாரப்படாததே இந்த நிலைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது, அத்தோடு மட்டுமில்லாமல்
25 வருடங்களாக ஆக்ரமிக்கப்பட்ட நீராதாரங்களில் குடியிருந்தாலும் பட்டா வழங்கக் கூடாது என்ற நீதித்துறையின் கருத்து தற்போது சற்று ஆறுதலான விஷயம்.
Comments